\
ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

ரொனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்
Published on

போர்ச்சுகலை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
அவரது காதலியான ஸ்பெயினைச் சேர்ந்த மாடல் அழகி ஜோர்ஜியானா ரோட்ரிகஸ் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தையொன்றும் பிறந்துள்ளது. அவர்களுக்கு ஈவா, மேட்டியோ என ரொனால்டோ பெயரிட்‌டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தகவலை ரொனால்டோ உறுதி செய்யவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com