"கொரோனா தடுப்பூசியை அடுத்தாண்டில் மட்டும் எதிர்பார்க்கலாம்" உலகச் சுகாதார அமைப்பு

"கொரோனா தடுப்பூசியை அடுத்தாண்டில் மட்டும் எதிர்பார்க்கலாம்" உலகச் சுகாதார அமைப்பு
"கொரோனா தடுப்பூசியை அடுத்தாண்டில் மட்டும் எதிர்பார்க்கலாம்" உலகச் சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.53 கோடியை கடந்துள்ளது. உலகம் முழுவதும் நோய் பாதிப்பால் ஒரே நாளில் 7,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 1,46,0000 எட்டியுள்ளது. அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்ட 71,000 பேர் உட்பட 41,00,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1200 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பிரேசிலில் 22,31, 000 பேர், ரஷ்யாவில் 7, 89,000 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.தென்னாப்பிரிக்காவில் புதிதாக 13,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,94,000மாக அதிகரித்துள்ளது. ஆனாலும் உலகம் முழுவதும் இதுவரை 93,43,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் உலகச் சுகாதாதார அமைப்பின் அவசர காலத் திட்டத்தின் தலைவர் மைக் ரியான் கூறும்போது நோய்த்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும், ஆனால் அவற்றின் பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் என்றார். மேலும் பொருளாதாரத்தைச் சார்ந்து இல்லாமல் தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com