சீனா: தானியங்கு முறையில் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ்

சீனா: தானியங்கு முறையில் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ்
சீனா: தானியங்கு முறையில் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ்

சீனாவில் தானியங்கு கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட  பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் கொரோனா வைரஸ் இருப்பதை சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து தொற்று உள்ள பொருட்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட யாருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ஹெபே மாகாணத்தில் உள்ள காங்ஜோ, யந்தாய், சாண்டோங் மாகாணத்திலுள்ள லினி ஆகிய இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பாக்கெட்டுகளில், மூன்று பாக்கெட்டுகளில் கொரோனா வைரஸ் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com