கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்?

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்?

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்?
Published on

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்துவது பற்றி உலக சுகாதார அமைப்பு அடுத்த வாரம் இறுதி முடிவெடுக்கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசி, பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனகா பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்க விண்ணப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான கூடுதல் தரவுகளை சமர்பிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டதால் கடந்த மாதம் 27 ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் சமர்பித்தது. அந்த தரவுகளை உலக சுகாதார அமைப்பும், தனிப்பட்ட மருத்துவ குழுவினரும் ஆராய்ந்து அடுத்து வாரம் இறுதி முடிவை எடுக்கின்றனர். அப்போது கோவாக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாமா? அதன் சாதக, பாதகங்கள் ஆகியவை குறித்த தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com