வலி நிவாரணிக்கு பலர் அடிமையாகும் வகையிலான மருந்துகளை சந்தைப்படுத்தியதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் ஆக்லஹாமா நீதிமன்றம் 4 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சனின் வலி நிவாரணி சந்தைப்படுத்தும் நடைமுறைகளால் பலர் அதன் மருந்துக்கு அடிமையாக நேரிட்டதாக ஆக்லஹாமா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் உள்ளூர் நிர்வாகம், மாகாண அரசுகள், தனிநபர்கள் என ஆயிரக்கணக்கான மனுக்கள் தாக்கலாகின.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் 4 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.