இப்படியா பண்ணுவீங்க! விமானத்தின் கழிவறையில் கையும் களவுமாக சிக்கிய ஜோடி.. முகம்சுளித்த பயணிகள்!

ஜோடி ஒன்று விமானத்தின் கழிப்பறையில் பாலியல் செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
easyjet  sex image
easyjet sex imagetwitter

சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில், ஜோடி ஒன்று விமானத்தின் கழிப்பறையில் பாலியல் செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

easyjet
easyjettwitter

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, இங்கிலாந்து லூட்டனில் இருந்து இபிசா சென்ற ஈஸிஜெட் என்ற விமானத்தில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதன் வீடியோவில், இந்த விமானத்தில் பயணம் செய்யும் விமானப் பணிப்பெண் ஒருவர், கழிப்பறையின் கதவைத் திறக்கிறார். அப்போது, கழிப்பறையில் இருக்கும் ஜோடி ஒன்று ஆடைகளைக் களைந்து பாலியல் செயலில் ஈடுபடுகின்றனர்.

இதைக் கண்டு விமானத்தில் பயணம் செய்த பயணியர் அனைவரும் முகம்சுளிக்கின்றனர். இதுதொடர்பாக, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், விமானம் ஐபிசாவில் தரையிறங்கிய பின்னர், அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

easyjet
easyjettwitter

இங்கிலாந்தில் பாலியல் குற்றங்கள் சட்டம் 2004இன் பிரிவு 71இன்படி, பொது கழிவறையில் வேண்டுமென்றே பாலியல் செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com