ஒரு கொத்து கறிவேப்பிலை 80 ரூபாயா? - ₹7000க்கு உங்களால இத்தனை பொருள்தான் வாங்க முடியும்!

ஒரு கொத்து கறிவேப்பிலை 80 ரூபாயா? - ₹7000க்கு உங்களால இத்தனை பொருள்தான் வாங்க முடியும்!
ஒரு கொத்து கறிவேப்பிலை 80 ரூபாயா? - ₹7000க்கு உங்களால இத்தனை பொருள்தான் வாங்க முடியும்!

தக்காளி, வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டாலே அதிர்ச்சியின் உச்சிக்கு நம் மக்கள் சென்றிடுவார்கள். ஆனால் ஒரு கொத்து கறிவேப்பிலை விலை 80 ரூபாய் என்றால் வாங்குவீர்களா?

ரொம்ப ஷாக் ஆக வேண்டாம். இப்போ நீங்க நம்ம ஊரில் கிடைக்கும் மளிகை பொருட்களின் விலை அமெரிக்காவில் எவ்வளவுக்கு விற்கப்படுகிறது என்பதைதான் பார்க்கப் போகிறோம்.

அமெரிக்காவில் வசித்து வரும் மும்பையைச் சேர்ந்த டிஜிட்டல் கிரியேட்டரான குஞ்சன் சைனி என்ற பெண்தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவில் குறைவான விலைக்கு விற்கப்படும் பொருட்களின் அமெரிக்க விலை பற்றி வீடியோவாக எடுத்து பகிர்ந்திருக்கிறார்.

அதில், பன்னீர் பாக்கெட்டின் விலை ரூ.393, துடைப்பம் ஒன்றின் விலை ரூ.472.92, ஒரு கொத்து கறிவேப்பிலையின் விலை கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 80 ரூபாய்க்கு அங்கு விற்கப்படுகிறது. ஆனால் நம் ஊரில் காய்கறி வாங்கினால் இலவசமாகவே கறிவேப்பிலையை கொடுப்பார்கள்.

மொத்தமாக 86 டாலருக்கு, அதாவது தோராயமாக 6700 ரூபாய்க்கு வெறும் 10 பொருட்களே அமெரிக்காவில் வாங்க முடியும் என்பதை குஞ்சைன் சைனி தன்னுடைய இன்ஸ்டா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தாலும் இப்போது வரை வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஐரோப்பியாவில் மளிகை பொருட்கள் வாங்க சென்றால் நீங்க ஓடியே விடுவீர்கள் என்றும், டாலரில் செலவிடும்போதும் அது பெரிய தொகையாகத்தான் தெரியும். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆவதால் அதற்கான கட்டணங்களும் உள்ளடங்கும் என  நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com