கொரோனாவால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு - வெள்ளை மாளிகை எச்சரிக்கை

கொரோனாவால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு - வெள்ளை மாளிகை எச்சரிக்கை
கொரோனாவால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு - வெள்ளை மாளிகை எச்சரிக்கை

அமெரிக்காவில் 2 லட்சம் உயிர்களை கொரோனா வைரஸ் பலிகொள்ள வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அங்கு மொத்தம் 1,64,266 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் 2 லட்சம் உயிர்களை பலிகொள்ள வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் கொரோனா விவகாரத்தை கையாளும் ஒருங்கிணைப்பாளர் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்கா கொரோனாவுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார நெருக்கடியிலிருந்து நாடு விரைவாக மீட்கப்படும் என்ற நம்பிக்கையும் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமூக விலகளை ஏப்ரல் கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். இதுவே பேரழிவைத் தடுக்க சிறந்த நடவடிக்கை. வைரஸ் தொடர்பான மரணங்கள் இரண்டு வாரங்களுக்கு உயராது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், நம் எதிர்காலம் நம் கையில் உள்ளது, மேலும் நம்முடைய நடவடிக்கைகளும், தியாகங்களுமே கொரோனாவின் ஆயுளை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com