‘காய்ச்சல், இருமல் மட்டுமல்ல’ - கொரோனாவுக்கு 6 புதிய அறிகுறிகள்..!

‘காய்ச்சல், இருமல் மட்டுமல்ல’ - கொரோனாவுக்கு 6 புதிய அறிகுறிகள்..!

‘காய்ச்சல், இருமல் மட்டுமல்ல’ - கொரோனாவுக்கு 6 புதிய அறிகுறிகள்..!
Published on

காய்ச்சல், இருமல் போன்றவை மட்டுமே கொரோனாவுக்கான அறிகுறிகள் அல்ல அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா என்பது கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை உலகளவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர். மின்னல் வேகத்தில் பரவி உலகையே மிரள வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவைப் பற்றி புதுப்புதுத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றுதான் புதிய அறிகுறிகளைப் பற்றிய தகவல். இருமல், காய்ச்சல், அதிக உடல்வெப்பம், சுவாசக்கோளாறு போன்றவையே கொரோனாவுக்கான அறிகுறிகள் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது.

ஆனால் மேலும் 6 அறிகுறிகளை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்துள்ளது.

கொரோனாவுக்கான 6 புதிய அறிகுறிகள் :

கடுமையான குளிர், அதனுடன் உடல் நடுக்கம்

தசைவலி, தலைவலி, தொண்டை வலி

சுவை அல்லது நுகரும் ஆற்றல் இழப்பு

உடனடி சிகிச்சை தேவைப்படும் அறிகுறி : தொடர் நெஞ்சு வலி

உடனடி சிகிச்சை தேவைப்படும் அறிகுறி : சுவாசிப்பதில் சிக்கல்

தற்போதுள்ள கொரோனா அறிகுறிகள்: இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல்

வைரஸ் தொற்று ஏற்பட்டு 2 முதல் 14 நாள்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படலாம் எனக்கூறப்பட்டுள்ளது. இதுதவிர சுவாசிப்பதில் சிக்கல், மார்பு பகுதியில் தொடர் வலி அல்லது அழுத்தம், குழப்பம், உதடுகளும் முகமும் நீல நிறமாக மாறுதல் போன்றவை உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அறிகுறிகள் என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com