
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
கொரோனா நோய் தொற்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது என்ற அதிர்ச்சியான, சோகமான செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இன்று ஒரே நாளில் 1152 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 953 பேர் கொரோனாவால் இன்று உயிரிழந்தனர். இத்தாலியில் 570, ஸ்பெயினில் 523 பேரும், பெல்ஜியத்தில் 496 பேரும் ஒரே நாள் பலியாகியுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக உயிரிழப்புகளில் இத்தாலியில் 18,849 பேரும், அமெரிக்காவில் 17,909 பேரும், ஸ்பெயினில் 15,970 பேரும், பிரான்ஸில் 12,210 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடங்கிய சீனாவில் 3,336 பேர் உயிரிழந்துள்ளனர்.