"இன்னும் 2 வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை" பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை !

"இன்னும் 2 வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை" பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை !

"இன்னும் 2 வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை" பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை !
Published on

இங்கிலாந்து உள்பட ஐரோப்பா முழுவதும் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 30 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45 ஆயித்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்தது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் "இங்கிலாந்து நாட்டவர்கள் பின்பற்றி வந்த கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. தற்செயலாகக்கூட கொரோனா பரவ அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை நெகிழ்த்தமுடியும். ஐரோப்பாவின் பிற பாகங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம்" என்றார்.

இங்கிலாந்தில் கடந்த ஏழு நாட்களில் சரசரியாக 700 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு முந்தைய எண்ணிக்கையை ஒப்பிட்டால் 28 சதவிகிதம் அதிகமாகும். இந்தக் குளிர்காலத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து அமைச்சர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதற்கு முன்பாக, அதாவது குளிர்காலத்திற்கு முன்பாகவே அது தாக்கலாம் என விஞ்ஞானிகல் கருத்து கூறியிருப்பது அந்நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com