உலகம்
வேகமாக பரவி வரும் கொரோனா - புதிய முடிவை கையிலெடுத்த ஹாங்காங் அரசு
வேகமாக பரவி வரும் கொரோனா - புதிய முடிவை கையிலெடுத்த ஹாங்காங் அரசு
ஹாங்காங்கில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதால் அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் இடமின்றி நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹாங்காங் நகரில் உள்ள 75 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என நிர்வாக தலைவர் கேரி லேம் தெரிவித்துள்ளார். வாரத்திற்கு ஒருமுறை என்ற கணக்கில் அனைத்து மக்களுக்கும் மூன்று முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு 10 லட்சம் பேரை பரிசோதனை செய்து தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இங்கு நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.