கொரோனா பரவல் - நேர்காணல் இல்லாமல் விசா தர அமெரிக்க அரசு விதிகளில் தளர்வு

கொரோனா பரவல் - நேர்காணல் இல்லாமல் விசா தர அமெரிக்க அரசு விதிகளில் தளர்வு
கொரோனா பரவல் - நேர்காணல் இல்லாமல் விசா தர அமெரிக்க அரசு விதிகளில் தளர்வு

கொரேனா பரவல் காரணமாக சில விசாக்களை நேர்காணல்கள் இல்லாமல் தரும் வகையில் அமெரிக்க அரசு விதிகளில் தளர்வளித்துள்ளது.

3-வது ஆண்டாக கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் விசா வழங்குவது தொடர்பாக தூதரகங்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. அதன்படி, தனித்திறன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H 1B விசா, கல்வி தொடர்பாக வழங்கப்படும் H 3 விசா, நிறுவனங்களுக்கு இடையே பணி மாறுவோருக்கு வழங்கப்படும் 'O' விசா ஆகியவற்றிக்கு நேர்காணல்கள் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல்கள் இல்லாமல் 2022 டிசம்பர் வரை இத்தகைய விசாக்களுக்கு தூதரக அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com