தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
Published on

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்தில் முதல்முறையாக, 40 வயதான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிலதெனியா தேவாலயத்திற்கு கடந்த ஞாயிறன்று சுவிட்சர்லாந்திலிருந்து வந்த போதகருடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அந்த 40 வயது நபர் தனியறையில் சந்தித்து உரையாடியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பிட்ட அந்த ஆராதனையில், பங்கேற்ற மற்றவர்களை அடையாளம் காண்பதற்காக, அங்கு ஊரடங்கு சட்டம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com