உலகம்
உலகில் 16.31 கோடி பேருக்கு கொரொனா தொற்று – 33.83 இலட்சம் பேர் பலி
உலகில் 16.31 கோடி பேருக்கு கொரொனா தொற்று – 33.83 இலட்சம் பேர் பலி
உலகளவில் இதுவரை 16.31 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 33.83 இலட்சம் பேர் உயிரிழந்தனர்.
உலகளவில் கொரோனா தொற்று பாதித்த 14.14 கோடி பேர், குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 25, 590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 498 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 3.36 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 5.99 இலட்சம் பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் ஒரே நாளில் 69,300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 2,067 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பிரேசிலில் இதுவரை மொத்தம் 1.55 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4.34 இலட்சம் பேர் உயிரிழந்தனர்.