\
கொரோனா பாதிப்பு: பிரான்சில் அச்சமூட்டும் இறப்பு எண்ணிக்கை!

கொரோனா பாதிப்பு: பிரான்சில் அச்சமூட்டும் இறப்பு எண்ணிக்கை!

கொரோனா பாதிப்பு: பிரான்சில் அச்சமூட்டும் இறப்பு எண்ணிக்கை!
Published on

கொரோனா பாதிப்பு காரணமாக பிரான்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சற்றே குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஐரோப்பாவை பொருத்தவரை பிரிட்டன் மற்றும் பிரான்சில் கொரோனாவின் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20,064 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,29,891 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அங்கு மேலும் 341 பேர் உயிரிழக்க, பலியானோர் மொத்த எண்ணிக்கை 85,044 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,52,083 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 32,92,764 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com