உலகளவில் 67 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: 7-வது இடத்தில் இந்தியா

உலகளவில் 67 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: 7-வது இடத்தில் இந்தியா
உலகளவில் 67 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு: 7-வது இடத்தில் இந்தியா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை நெருங்கியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,98,370ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,93,142 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,49,457 ஆக உள்ளது. 

உலக அளவில் அமெரிக்கா அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,24,051 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,10,173 ஆக உள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,26,713 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,363 ஆக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com