trump
trumpweb

ஈரான் போர் முடிந்து விட்டது.. அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்! டிரம்ப் கூறியது என்ன?

ஈரான் போர் முடிந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தொடர்கிறது. டிரம்ப், ஈரான் போர் முடிந்துவிட்டதாகவும், ஈரானியர்கள் அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால், ஈரான் இதை மறுத்துள்ளது.

ஈரானுக்கும் - அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே நடைபெறும் போர் 3 வாரத்தை தாண்டியும் தொடர்ந்து வருகிறது. போரின் தொடக்கத்தில் ஈரானால் இந்த போரில் வீரியமாக பதிலடி கொடுக்க முடியாது என்று பேசப்பட்டது. ஏனெனில் கடந்த ஆண்டு இஸ்ரேலின் தாக்குதலில் ஏராளமான ஈரானிய ஏவுகணை தளங்கள் தகர்க்கப்பட்டன.

ஈரான் - இஸ்ரேல்
ஈரான் - இஸ்ரேல்web

ஆனால், போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தங்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது இஸ்ரேல் மட்டும் அமெரிக்க தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

trump
ஈரான் போருக்கு மத்தியில்.. அசுரனை களமிறக்கிய இந்தியா.. அஞ்சும் உலக நாடுகள்..?

இதனிடையே ஈரானுடனான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன் காரணமாக 5 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். ஆனால், அமெரிக்காவுடன் எத்தகைய பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடபடவில்லை என ஈரான் திட்டவட்டமாகக் கூறியது.

இது டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஈரான் போர் முடிந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்துக்கு டிரம்ப் அளித்த ஒரு நேர்காணலில் ஈரானுடனான போர் முடிந்து விட்டது, நான் எப்போது நினைக்கிறேனோ அப்போது இந்தப் போரை முடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

டிரம்ப்
டிரம்ப் Pt web

மேலும், ஈரானில் தாக்குவதற்கு இப்போது எதுவும் மிச்சமில்லை என்றும், ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு உடன்படிக்கைக்காக அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அதே போல அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் ராணுவக் கட்டமைப்பு சிதைந்துவிட்டதால், அவர்கள் போரை நிறுத்த விரும்புவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

trump
ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈரான் அதிகாரி மரணம்? இஸ்ரேல் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com