குற்றம்சாட்டப்பட்டவர்கள்
குற்றம்சாட்டப்பட்டவர்கள்pt web

காங்கோவில் 172 பேருக்கு மரண தண்டனை: சர்ச்சையில் அரசு..?

172 பேரை தூக்கிலிடுவதற்கான ஆயத்த பணிகளை காங்கோ அரசு துவங்கியுள்ளது. காங்கோவில் மரண தண்டனை முறை 1980ல் ஒழிக்கப்பட்டது. ஆனால், 2006 ஆம் ஆண்டு மீண்டும் கொண்டுவரப்பட்டது. தற்போது நூற்றுக்கணக்கானோரை தூக்கிலிட என்ன காரணம் ? விரிவாக பார்க்கலாம்.
Published on

காங்கோ என்பது மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. அந்நாட்டில் ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், "குலுனாஸ்" அல்லது "நகர்ப்புற கொள்ளைக்காரர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள். அவர்கள் 18ல் இருந்து 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அவ்வாறு ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதற்காக 172 பேரை தூக்கிலிட காங்கோ அரசு ஆயத்தமாகியுள்ளது. அதற்காக 70 கைதிகள் தலைநகர் கின்ஷாவிலுள்ள சிறைக்கும், 102 பேர் மாங்கலா மாகாணத்தின் அங்கெங்கா அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்தான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

காங்கோவில் நிறைவேற்றப்படப்போகும் மரண தண்டனை குறித்து இரு வேறுபட்ட விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை சரியாக இருக்கும் என வரவேற்கின்றனர். மறுபுறம் இது மனித உரிமை மீறல் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

காங்கோவில் மரண தண்டனை முறை ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது. அதற்கு பிறகு 1980 ஆம் ஆண்டு இந்த மரண தண்டனை முறையை ஒழிப்பதாக முடிவெடுத்தனர். ஆனால் , மீண்டும் 2006 ஆம் ஆண்டு காங்கோவில் மரண தண்டனை கொண்டுவரப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com