உலகம்
காமிக்ஸ் பலூன்களின் வண்ண ஊர்வலம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
காமிக்ஸ் பலூன்களின் வண்ண ஊர்வலம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
பெல்ஜியம் நாட்டில் புகழ்பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரங்கள் வடிவத்திலான பலூன்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள அரண்மனை அருகில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் வடிவத்திலான பலூன்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த பேரணியில் பெங்குவின் உள்ளிட்ட பொம்மை வடிவ பலூன்களை நூற்றுக்கணக்கானோர் கையில் ஏந்தி வந்தனர். இதை ரசித்துப் பார்த்த குழந்தைகள், அதை படமும் எடுத்தனர். சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்வை கண்டுகளித்தனர். 2 மாதங்களுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் முயற்சி நடைபெற்றிருந்தால் பலத்த பாதுகாப்புடன் இவ்விழா நடைபெற்றது.