கொலம்பியா| பல் பிடுங்கியதால் ரத்தக்கசிவு... சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

கொலம்பியாவில் பல் அகற்றிய சிறுமி ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்Freepik

கொலம்பியாவின் தோலிமா பகுதியைச் சேர்ந்தவர் அழுசினா டிரைனா. இவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான சாலோம் போகர்குயீஸ் என்ற சிறுமி, பல் வலியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தன் மகளைச் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவர், சிறுமியின் பாதிக்கப்பட்ட இடத்தில் எக்ஸ்ரே எடுத்து வரும்படி அறுவுறுத்தியுள்ளார். அதன்படி, சிறுமியின் தாயாரும் எடுத்துச் சென்றுள்ளார். அதில், சிறுமியின் கடைவாய் பல் உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்Freepik

இதனையடுத்து, அந்த உடைந்த பல்லை அகற்றுவது குறித்து சிறுமியின் தாயாரிடம் பேசியுள்ளார். அவரும் ஒப்புதல் அளிக்க, சிறுமிக்கு கடைப்பல்லை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த மருத்துவர் சிறுமியின் பல்லை அகற்றியுள்ளார். ஆனால் அதன் பின்னர் சிறுமிக்கு கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்துவதற்காக அந்தச் சிறுமியை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளார். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்Freepik

இதுகுறித்து சிறுமியின் தாயார், “ரத்தக்கசிவை கட்டுப்படுத்த அங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியவில்லை. அதுவே எனது மகளின் இறப்புக்கு காரணம். முன்னர் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட என் மகள் தொடர்ச்சியான சிகிச்சையால் குணமடைந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com