இடிந்து விழுந்த விண்வெளி ஆய்வு நிலைய சுவர்! ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயல்..!

இடிந்து விழுந்த விண்வெளி ஆய்வு நிலைய சுவர்! ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயல்..!
இடிந்து விழுந்த விண்வெளி ஆய்வு நிலைய சுவர்! ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயல்..!

ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயலால், விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

ஜப்பானில் புயல் காரணமாக அந்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மின் இணைப்புகள், தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கட்டடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. குறிப்பாக தனேகாஷிமா தீவில் உள்ள ஜப்பான் விண்வெளி நிலையத்தின் ஒரு சுவர் முழுமையாக சேதமடைந்தது. மிமிடா என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மியாகோனோஜோ நகரில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய பாதிப்புகளால் இருவர் உயிரிழந்தனர்.

இந்த புயலால் கைஷூ பகுதியில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. ரயில் சேவைகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. தற்போது நன்மடோல் புயல் வலுவிழுந்து ஜப்பானின் வடக்கு கடலோரப் பகுதியை ஓட்டி பசிபிக் பெருங்கடலில் நிலை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com