ஸ்பெயினில் குப்பைச் சேகரிக்கும் பணியில் கழுதைகள்!

ஸ்பெயினில் குப்பைச் சேகரிக்கும் பணியில் கழுதைகள்!
ஸ்பெயினில் குப்பைச் சேகரிக்கும் பணியில் கழுதைகள்!

நம்மூரில் உப்பு மூட்டைகளைச் சுமக்கும் கழுதைகளைப் பார்த்திருப்போம். இன்று கழுதைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கண்களில் ஏதும் பிரச்சினை என்றால் கழுதைப் பாலை ஊற்றும் ஒரு நம்பிக்கையும்கூட கிராமங்களில் இருந்துவந்தது. கழுதை முகத்தில் முழித்தால் நல்லது என்றும் சொல்வார்கள்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள கடற்கரைகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கும் பணியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செய்துவருகின்றனர். அதில் ஈடுபடும் பெண்களுக்கு உதவியாக கழுதைகள் இருந்துவருகின்றன.

ஹூல்வா மாகாணத்தின் மாதலஸ்கனாஸ் கடற்கரையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கழுதையின்மீது கட்டப்பட்டுள்ள கூடை போன்ற சாக்குப்பையில் சேகரிக்கின்றனர்.

கழுதைகள் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படுவதாகக் கூறுகிறார் தூய்மைப் பணியை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர் மரியா ஜெசிகா.

ஸ்பெயின் கடற்கரையில் ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களில் இருபதுக்கும் அதிகமான பைகளில் தன்னார்வலர்கள் குப்பைகளைச் சேகரித்துவருகின்றனர். இந்தப் பணிக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com