உலகம்
சிட்னி நகரில் 80000 பேர் பங்கேற்ற வினோத ஓட்டப்பந்தயம்
சிட்னி நகரில் 80000 பேர் பங்கேற்ற வினோத ஓட்டப்பந்தயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 80 ஆயிரம் பேர் பங்கேற்ற ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. சிட்டி2சர்ஃப் என்ற பெயரில் நடைபெற்ற ஓட்ட பந்தயத்தில் விநோதமான ஆடைகளை அணிந்த படி பலரும் ஆர்வமாக பங்கேற்றனர். இந்தப் போட்டி 1971 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
14 கிலோமீட்டர் தொலைவினை 47 நிமிடங்களில் கடந்து செலியா என்ற பெண் முதலிடத்தை பிடித்தார். இந்த பந்தயம் மூலம் கிடைக்கும் தொகையானது, பல்வேறு மக்கள் நல பணிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த பந்தயத்தில் 1971 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் 86 வயதான ரோச்செஸ்டர். இவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதால், சிகிச்சையை முன்னிட்டு அடுத்த ஆண்டு கலந்து கொள்ள முடியாது என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.