"பாவத்திற்கான வரிகள்.." - விரைவில் அறிமுகம்

"பாவத்திற்கான வரிகள்.." - விரைவில் அறிமுகம்

"பாவத்திற்கான வரிகள்.." - விரைவில் அறிமுகம்
Published on

சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளின்படி, சிகரெட் மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களின் விலை இருமடங்காக உயர்த்தப்படுகிறது.

கச்சா எண்ணெய் விற்பனை வருவாய் குறைந்ததை தொடர்ந்து இந்த வரி விதிப்பை சவுதி அரேபியா அரசு அறிமுகம் செய்கிறது. சவுதி மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளிலும் இந்த வரி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பல ஆண்டுகளாக வரியில்லாமல், அரசின் தொடர் மானியங்கள் மூலமாக பயனடைந்து வந்த சவுதி மக்கள், அரசின் இந்த நடவடிக்கையால் சற்று அதிர்ந்துபோயுள்ளனர். மன்னராட்சியில் சட்டங்களை மக்கள் எதிர்த்துக்கேட்க முடியாது என்பதால் இதுகுறித்து மக்கள் மௌனம் காத்து வந்தாலும், இவ்விவகாரத்தில் விரைவில் தங்கள் ஆட்சேபனையை மக்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரி காரணமாக விலை இருமடங்காக அதிகரிக்க இருப்பதால், பெருமளவு இலாபம் ஈட்டுவதற்காக பல வர்த்தகர்கள் சிகெரெட்டுகளை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com