வடகொரியாவை உளவுப் பார்க்க செல்லும் அமெரிக்க அதிகாரி

வடகொரியாவை உளவுப் பார்க்க செல்லும் அமெரிக்க அதிகாரி
வடகொரியாவை உளவுப் பார்க்க செல்லும் அமெரிக்க அதிகாரி

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்க்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வரும்  நிலையில் அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பின் இயக்குநர் மைக் பாம்பியோ வட கொரிய தலைவர் கிம்முடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பின் இயக்குநர் மைக் பாம்பியோ பியாங்யாங்கிற்கு அவர் பயணம் மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் கூறினார். ஃபுளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்று பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். வட கொரிய அதிபருடனான பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com