உலகம்
அமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவு
அமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவு
அமெரிக்காவில் 30 மணி நேரத்தில் 53 அங்குலம் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக பென்சில்வேனியாவில் உள்ள எரி பகுதியில் கடந்த 30 மணி நேரத்தில் 53 அங்குலம் அளவுக்கு பனிப் பொழிவு காணப்பட்டதால் சாலைகள் வெண் போர்வை போர்த்தியது போல உள்ளன. கட்டடங்கள், மரங்கள், வாகனங்கள் மீதும் அடர்த்தியான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதற்கிடையே நிலைமையை சமாளிக்க உள்ளூர் அதிகாரிகள் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.