உலகம்
கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்த பென்குயின்கள்: குழந்தைகள் பரவசம்
கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்த பென்குயின்கள்: குழந்தைகள் பரவசம்
சீனாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பென்குயின்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிவிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாட்டுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் நடந்து வரும் உள்ளூர் திருவிழாவை ஓட்டி, அங்கு செயற்கையான பனிப் பிரதேச தீவு உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அங்கு பென்குயின்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அந்தப் பென்குயின்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் கிறித்துமஸ் தாத்தா உடை அணிவித்தனர். இதனை குழந்தைகளும், பெரியவர்களும் மிகுந்த ஆர்வமுடன் கண்டு களித்து சென்றனர்.