\
Nvidia
NvidiaReuters

Chip உலகின் Super Powers.. அதிக வருவாய் ஈட்டும் TOP நிறுவனங்கள்!

சிப் விற்பனையில் டாப் 10 பட்டியலை அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றும் நிலையில், உற்பத்தியில் தைவானின் TSMC உலக முதலிடத்தை தக்க வைத்திருக்கும் சுவாரஸ்ய தகவல்.
Published on
Summary

செமிகண்டக்டர் சிப்புகள் நவீன உலகின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில், வருவாய் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள் பட்டியல் வெளியானது. அமெரிக்காவின் என்விடியா 125.7 பில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடம் பிடிக்க, தென்கொரியாவின் சாம்சங் 72.5 பில்லியனுடன் 2ஆம் இடம், எஸ்கே ஹைனிக்ஸ் 60.6 பில்லியனுடன் 3ஆம் இடம் பெற்றுள்ளன.

செமி கண்டக்டர் சிப்புகளே நவீன உலகின் இயக்கு சக்தியாக உள்ளன. இந்நிலையில் செமி கண்டக்டர் சிப்புகள் விற்பனையில் உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அவற்றின் வருவாய் வரிசைப்படி இன்ஃபோ ஜி பகுதியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த என்விடியா நிறுவனம் 125.7 பில்லியன் டாலர் வருவாயுடன் உலகின் மாபெரும் செமிகண்டக்டர் சிப் நிறுவனமாக திகழ்கிறது . தென்கொரியாவின் சாம்சங் 72.5 பில்லியன் டாலர் வருவாயுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. தென்கொரியாவை சேர்ந்த எஸ்கே ஹைனிக்ஸ் நிறுவனம் 60.6 பில்லியன் டாலர் வருவாயுடன் 3ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்த 6 இடங்களையும் அமெரிக்க நிறுவனங்களே பெற்றுள்ளன.

இன்டெல் 47.9 பில்லியன் டாலர், மைக்ரான் டெக்னாலஜி 41.5 பில்லியன் டாலருடன் 4,5ஆவது இடங்களில் உள்ளன. குவால்காம் நிறுவனம் 37 பில்லியன் டாலர் வருவாயுடன் 6ஆம் இடத்தை பெற்றிருந்தது. பிராட்காம் நிறுவனம் 34.3 பில்லியன் டாலர், ஏஎம்டி 32.5 பில்லியன் டாலர் வருவாயுடன் 7,8 ஆவது இடத்தில் இருந்தன. ஸ்மார்ட்ஃபோன் ஜாம்பவனான ஆப்பிள் 24.6 பில்லியன் வருவாயுடன் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது.

TSMC
TSMCReuters

தைவான் நாட்டை சேர்ந்த மீடியாடெக் நிறுவனம் 18.5 பில்லியன் டாலர் வருவாயுடன் 10ஆம் இடத்தை பெற்றுள்ளது. எனினும் செமிகண்டக்டர் உற்பத்தியில் தைவானின் TSMC உலகளவில் முதலிடம் வகிக்கிறது. இது மேற்கண்ட விற்பனையாளர்களில் பலருக்கு ஒப்பந்த முறையில் சிப்ஸ்களை உற்பத்தி செய்து தருகிறது

Nvidia
Passive smoking - ஆல் அதிகரிக்கும் மரணங்கள்.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com