shin chan house
shin chan houseபுதியதலைமுறை

அடேங்கப்பா..! ’shin chan’ வீட்டை நிஜமாக்கிய சீன இளைஞர்.. அசல் வீடாக மாறிய அனிமேஷன்!

சீனாவில் ஒரு இளைஞன் தனக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான ஷிஞ்சானின் வீட்டைப் போலவே ஒரு வீட்டை உருவாக்கியுள்ளார். இவரது வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Published on

சீனாவில் ஒரு இளைஞன் தனக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான ஷிஞ்சானின் வீட்டைப் போலவே ஒரு வீட்டை உருவாக்கியுள்ளார். இவரது வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அனிமேஷன் கதாபாத்திரங்களின் உண்மையான பிரியர் என்றால் ஷின்-சான் பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. உண்மையான கார்ட்டூன் ஆர்வலர்களுக்கு, ஷின்-சான் என்பது வெறும் கார்ட்டூன் அல்ல அது ஒரு உணர்ச்சி. சிறுவர்களின் மிக பிரியமான இந்த கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதில், சிவப்பு மற்றும் வெள்ளை செங்கற்களால் தனித்துவமாக கட்டப்பட்ட ஷின்னோசுகே நோஹாராவின் (ஷின்-சான்) வீட்டை, ரசிகர்களுக்கு மறக்க முடியாது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் அந்த வீட்டை புதுப்பிக்க ரூ.3.5 கோடி செலவு செய்துள்ளார். இந்த சம்பவம் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணியை தொடங்கினார். பின்னர், ஓராண்டுக்கும் மேலாக ஷின்-சானின் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் சீனாவில் க்ரேயான் ஷின்-சானுக்கான பிரத்யேக உரிம முகவரைக் கண்டுபிடித்து, பின்னர், வீட்டை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காகவும், அதிகாரப்பூர்வ உரிமைகளைப் பெறுவதற்காகவும் ஷாங்காய்க்கு ஐந்து முறை பயணங்களை மேற்கொண்டார்.

இந்த கனவை உயிர்ப்பிக்க ஷெனின் தாயார் அவருக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஏறக்குறைய இந்த வீடு 100 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. தற்போது இந்த வீடு உலகம் முழுவதிலும் இருந்து அனிமேஷன் கதாபாத்திர ரசிகர்களை ஈர்க்கும் ஒரு பிரபலமான மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

ஷென்னின் லட்சியம் இத்தோடு முடிந்துவிடவில்லை. அனிமேஷனில் காட்டப்படும் ஃபுடாபா மழலையர் பள்ளியை உருவாக்குவதும், கசுகாபே நகரம் முழுவதையும் ஷின்-சான் நினைவாக மீட்டுருவாக்கம் செய்வதும் ஷென்னின் நீண்ட கால திட்டமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com