தாமதமாகும் தர அனுமதி.. இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா  ஜியோமி, ஓப்போ?

தாமதமாகும் தர அனுமதி.. இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா ஜியோமி, ஓப்போ?

தாமதமாகும் தர அனுமதி.. இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா ஜியோமி, ஓப்போ?
Published on

அண்மையில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் இருதரப்பு ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு சீன நட்புறவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஏற்கெனவே சீனத் தயாரிப்புகளான பல செயலிகள் தடை செய்யப்பட்டன.

தற்போது இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஜியோமி, ஓப்போ தயாரிப்புகளுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபீரோ ஆப் இந்தியன் ஸ்டேன்டேர்ட்ஸ் (BIS) அமைப்பு, சீன செல்போன் தயாரிப்புகளுக்கு அனுமதி வழங்குவதற்கு பல வாரங்கள் தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த தாமதம் உண்மையா என்பது பற்றிய சந்தேகத்திற்கு இந்திய தர நிர்ணய அமைப்பின் இயக்குநர் பிரமோத் குமார் பதிலளிக்கவில்லை. சீனாவின் வணிக அமைச்சகமும் மெளனமாக இருந்துவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com