\
Chinese Scientists Overtake Elon Musk in Neural Tech
brain chip AI - PT

மூளை சிப் தொழில்நுட்பம்.. எலான் மஸ்க்கை முந்திய சீன விஞ்ஞானிகள்!

உலகின் முதல் வணிகரீதியான 'மூளை சிப்' (Chip) தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

தொழில்நுட்ப உலகில் அமெரிக்காவுக்குப் பெரும் சவால் அளிக்கும் வகையில், உலகின் முதல் வணிகரீதியான 'மூளை சிப்' (Chip) தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க பில்லியனர் (Billionaire) எலான் மஸ்க்கின் 'நியூராலிங்க்' (Neuralink) நிறுவனம் இத்தகைய சோதனைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரை முந்திக்கொண்டு சீனா இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.

மனித மூளையின் சிந்திக்கும் திறனை நேரடியாகக் கணினியுடன் இணைக்கும் வகையில் இந்தச் சிறிய சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்கவாதம் மற்றும் நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்களின் எண்ணங்கள் மூலமாகவே கணினி, கைப்பேசி மற்றும் செயற்கை உறுப்புகளைத் தன்னிச்சையாக இயக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இந்தத் தொழில்நுட்பம், உலகளாவிய வணிகச் சந்தையில் சீனாவுக்குப் பெரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கத்தைத் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com