Kash Patel
Kash PatelFBI

மக்களை காலி செய்யும் பூஞ்சை... கைதான சீன ஏஜென்ட்...RED ALERTல் அமெரிக்கா..!

இரண்டு சீன குடிமக்கள் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க FBI இயக்குநரான காஷ் படேல் இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.
Published on

தேச பாதுகாப்புக்கே அச்சுறத்தலை ஏற்படுத்தும் ஃபுசேரியம் கிராமினியாரம் என்னும் விஷ பூஞ்சையை அமெரிக்காவிற்குள் அனுமதியின்றி இந்த சீனர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். 33 வயதான யுன்கிங் ஜியான் மற்றும் அவரின் 34 வயதான காதலர் ஜுன்யோங் லியூவை அமெரிக்கா கைது செய்திருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாசிகளான இவர்கள், சீன அரசிடமிருந்து இந்த நோயூக்கியின் ஆராய்ச்சிக்காக நிதியும் பெற்றிருக்கிறார்கள் என்கிறார் காஷ் படேல்.

Kash Patel
Kash Patel

கடந்த ஜூலை மாதம், டெட்ராய்ட் விமான நிலைய சோதனையின் போதே இந்த பூஞ்சையை வைத்திருந்ததற்காக லியூ சிக்கியிருக்கிறார். ஆனால், அதை ஆராய்ச்சிக்காக என சொல்லி அப்போது மறைத்திருக்கிறார் லியூ. முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்த லியூ, பின்னர் இவை ஃபுசேரியம் கிராமினியாரம் பூஞ்சையின் வெவ்வேறு வகைகள் என ஒப்புக்கொண்டார். விசா மோசடி, அனுமதியின்றி ஆபத்தான பொருட்களை அமெரிக்காவிற்குள் கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்க நிறுவனங்களில் ஊடுருவி அவர்களின் உணவு விநியோகத்தை குறிவைக்க முகவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அனுப்பி வருகிறது. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கி அமெரிக்க உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடியது என கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார் காஷ் படேல். ஃபுசேரியம் கிராமினியாரம் என்னும் இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, மக்காச்சோளம், அரிசி ஆகிய முக்கிய உணவு தானியங்களில் "ஹெட் பிளைட்" என்னும் நோயை ஏற்படுத்தவல்லது. இந்த நோய் உலகளவில் ஆண்டுக்கு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது . மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் இனப்பெருக்க குறைபாடுகளையும், வாந்தி, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்தக்கூடியது.

Kash Patel
நிவாரணம் முகாமை நோக்கி வந்த காஸா மக்கள்... சுட்டுக்கொன்ற இஸ்ரேல்..!

டிரம்ப்பின் வர்த்தக போராலும், அண்டை நாடுகளுக்கு இடையேயான சண்டைகளாலும் பதற்ற சூழல் அதிகரித்துவருகின்றன. இதற்கிடையே சீனாவிலிருந்து இப்படியான விஷ பூஞ்சை அமெரிக்காவுக்குள் நுழைந்திருப்பது மேலும் பொருளாதார சூழ்நிலையை மோசமாக்கவே செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com