இந்திய பெருங்கடலில் சீன கடற்படை போர் பயிற்சி மெற்கொண்டுள்ளது. இதில் நவீன ரக ஏவுகணைகளும் போர்க்கப்பல்களும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிக்கிமில் உள்ள டோக்லாம் எல்லைப் பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்து சாலை அமைக்க முயற்சி செய்ததை இந்திய ராணுவம் சில மாதங்களுக்கு முன் தடுத்தது. அந்த இடத்தில் இந்திய ராணுவமும், சீன ராணுவமும் முகாமிட்டு இருப்பதால், இருதரப்புக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் சீனா போர்ப்பயிற்சியை நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்தில் இந்தப் பயிற்சி நடந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை. பொதுவாக, இந்திய பெருங்கடலில் போர் பயிற்சியை மேற்கொள்ளாத சீன ராணுவம் இப்போது மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் கடற்படையில் இந்திய பெருங்கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.