''கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிவிட்டோம்'' - மகிழ்ச்சியில் நடனம் ஆடிய மருத்துவ ஊழியர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்திய மகிழ்ச்சியில் மருத்துவ உதவியாளர்கள் இருவர் நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 2760 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 80 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக சீனாவில் 2 ஆயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 406 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 52 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆரம்பக் கட்டத்திலேயே கொரோனாவை கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் அந்த நோயை குணப்படுத்தலாம் என்ற நிலை மட்டுமே தற்போது உள்ள நிலையில் நிரந்தர மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்திய மகிழ்ச்சியில் மருத்துவ உதவியாளர்கள் இருவர் நடனம் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
'இதயத்தை உருக வைக்கும் வீடியோ' என்றும் 'அவர்கள் நிஜ ஹீரோக்கள்' என்றும் பலரும் அந்த நடன வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

