பிரேசில் சிக்கன், இறால் மூலம் கொரோனா வைரஸ் - சீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்
சீனாவில் உள்ள இரண்டு நகரங்களுக்கு பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை உணவுகளில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறைமுகப் பகுதிகளில் இருந்து தொற்றுப் பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஈக்வடார் பகுதியில் இருந்து உறைந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் கோழி இறக்கைகள் மற்றும் இறால்கள் சீனாவின் சென்சன் நகருக்கு வந்துள்ளன. அதில் இருந்து சில மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஜியான் நகருக்கு வந்த பொருட்களிலும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களை கண்காணிக்க சீன சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. செயற்கை உணவுப் பொருட்களைக் கையாண்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக சென்சன் நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.