'புஜியனை' களமிறங்கிய சீனா.. யோசிக்கும் உலக நாடுகள்! ஜி ஜின்பிங் போட்ட மெகா ப்ளான்!
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அதி நவீன போர்க்கப்பலை களமிறக்கி உலக நாடுகளை மிரள வித்துள்ளது சீனா..இந்த கப்பலில் உள்ள முக்கிய அம்சங்கள் தான் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது..
சமீபகாலமாக சீனா தொடர்ந்து தனது ராணுவ கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறது..குறிப்பாக வான் வழி தரைவழை என அனைத்தையும் வலுபடுத்தி வந்த சீனா தற்போது கடற்படையை வலுப்படுத்தியுள்ளது..குறிப்பாக சீனாவிடம் 'லியோனிங், ஷான்டாங்' என்ற இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன..
தற்போது மூன்றாவதாக புஜியன்' என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய விமானம் தாங்கி போர்க்கப்பலை, பலகட்ட சோதனைகளுக்கு பின், தனது கடற்படையில் இணைத்து சீனா..
கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த போர்க்கப்பலின் முதல் சோதனை நடந்த நிலையில், தற்போது கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிடம் உள்ள லியோனிங், ஷான்டாங்' விமானம் தாங்கி போர்க்கப்பல்களில், 'ஸ்கி - ஜம்ப்' என்ற முறையில் விமானம் ஏவப்படும்..தற்போதுள்ள புஜியன் போர்க்கப்பலில் மின்காந்த உந்துவிசை மூலம் விமானம் ஏவப்படுகிறது..இந்த போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகளையும், விமானங்களையும் ஏவ முடியும்..
ஏற்கனவே சீனாவிடம் உள்ள இரண்டு போர்க்கப்பலை விட இந்த "புஜியன் போர்க்கப்பல் மிகப்பெரியது. அமெரிக்காவின் போர் கப்பலுக்கு நிகராக இந்த போர் கப்பலை சீனா உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

