உலகம்
சீனாவின் உஹான் நகரத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..!
சீனாவின் உஹான் நகரத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..!
கொரோனாத்தொற்று முதன்முதலாக பரவத்தொடங்கிய சீனாவின் உஹான் நகரத்தில், தொற்று முற்றிலும் குறைந்ததால் வரும் செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமான காரணத்தால் சீன நகரமான உஹானில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளையும் மீண்டும் திறக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் பள்ளிக்கு மற்றும் வெளியே முகமூடி அணியவும், முடிந்தால் பொது போக்குவரத்தைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை ஆபத்தான சூழ்நிலை உருவானால் ஆன்லைன் கற்பித்தலுக்கு மாறுவதற்கான அவசரகால திட்டங்களையும் நகர நிர்வாகம் உருவாக்கியுள்ளது.