சீனாவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி

சீனாவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி

சீனாவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி
Published on

சீனாவில் வெகு விரைவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அவசர கால மருத்துவ உதவியாக இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி Sinovac தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி என்று ஆரம்பமாக உள்ளது என்பதை சீன அரசு தெரிவிக்கவில்லை. 

அது நடந்தால் உலகிலேயே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் முதல் நாடாக இணையும் சீனா. இந்த தடுப்பு மருந்து குழந்தைகளின் உடலில் எப்படி செயல்படுகிறது, பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா? என்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளன. 

மேலும் இந்த சோதனையில் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட பிறகு மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக ஆய்வில் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்து மட்டுமல்லாது சீனாவில் மேலும் சில தடுப்பு மருந்துகள் குழந்தைகளின் பயன்பாட்டுக்காக வர உள்ளதாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com