சீன ராணுவம் அதிரடியாக 13 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, ராணுவத்திலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது.
உலகிலேயே அதிக அளவிலான ராணுவ வீரர்களை கொண்டது சீன ராணுவம். கிட்டத்தட்ட 23 லட்சம் வீரர்கள் சீன ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சரிபாதிக்கும் அதிகமாக 13 லட்சம் ராணுவ வீரர்களை வீட்டுக்கு அனுப்ப சீன ராணுவம் முடிவெடுத்துள்ளது. அதேசமயம், கடற்படை, விமானப் படைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன ராணுவத்தில் 3 லட்சம் வீரர்கள் குறைக்கப்படுவார்கள் என சீன பிரதமர் ஜி ஜின்பிங் 2015-ம் ஆண்டு அறிவித்திருந்த நிலையில் தற்போது 13 லட்சம் வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். சீன ராணுவத்தில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் மிகவும் பழைமை வாய்ந்தவை. எனவே அவற்றை தற்போதையை நிலைக்கு ஏற்ப மாற்றி நவீன உத்திகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.