இந்தியாவுடனான எல்லை பிரச்னை...திபெத்தில் படைகளைக் குவிக்கும் சீனா

இந்தியாவுடனான எல்லை பிரச்னை...திபெத்தில் படைகளைக் குவிக்கும் சீனா

இந்தியாவுடனான எல்லை பிரச்னை...திபெத்தில் படைகளைக் குவிக்கும் சீனா
Published on

சிக்கிம் மாநிலத்தின் தோக்லாம் பகுதியில் இந்தியாவுடனான எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், அதிக அளவிலான ராணுவப் படைகளை சீனா திபெத்தில் குவித்து வருகிறது. 

இந்தியா, சீனா மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியாக இருக்கும் திபெத்தில் ஆயிரக்கணக்கான ராணுவ வாகனங்கள் மற்றும் படைகளை சீன ராணுவம் கடந்த ஜூன் இறுதியில் இருந்தே குவிக்கத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்தின் வடக்குப் பகுதியில் உள்ள குன்லுன் மலைப்பிரதேசங்களில் இந்தப் படைகளை சீனா குவித்து வருகிறது. 

இந்திய எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் சீன ராணுவம் ஆயுதப் பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்டது. அதேபோல சிக்கிம் மாநிலத்தின் தோக்லாம் பகுதியில் இந்திய முகாம்களை சீன ராணுவம் அழித்ததைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com