உயரம் குறைந்ததா..? இமயமலையை மீண்டும் அளக்க முடிவு

உயரம் குறைந்ததா..? இமயமலையை மீண்டும் அளக்க முடிவு

உயரம் குறைந்ததா..? இமயமலையை மீண்டும் அளக்க முடிவு
Published on

இமயமலை சிகரத்தை மீண்டும் அளந்து பார்க்க இந்திய அரசும், நேபாள அரசும் முடிவு செய்துள்ளது.

கடந்த 1955 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவுகளின் படி எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டம் உயரம் கொண்டதாக அறியப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக இமயமலையின் உயரம் மற்றும் இருப்பிடமும் மாறியிருக்கலாம் என நேபாள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கு சுமார் 75 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், மலையின் உச்சியில் மூன்று இடங்களிலிருந்து மலையின் உயரத்தை அளக்கும் பணி நடைபெறும் என்றும் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உலகின் மிக உயரமான சிகரமான இமயமலை சிகரத்தையும் அளந்து பார்க்க இந்தியாவும், நேபாளமும் முடிவு செய்துள்ளன. டோக்லாம் எல்லை பிரச்னை காரணமாக, அளக்கும் நடவடிக்கை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்காக பல உபகரணங்களை மலையின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டியதுள்ளதாகவும்,  இதற்காக ஷெரப்பா எனப்படும் மலை இனமக்களின் உதவியை நாடவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்திற்கு முன்பு 8,848 மீட்டர் உயரத்தில் உலகத்தின் உயரமான மலையாக இருந்த இமயமலை, தற்போதும் அதே பெருமையோடு இருக்கிறாதா அல்லது  என்பது ஆய்வுக்கு பின் தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com