XI Jinping & Trump
XI Jinping & Trump web

உலக அறிவியல் ஆராய்ச்சி முதலீட்டில் சீனா சாதனை.. அமெரிக்காவுக்கு சவால்!

உலக அறிவியல் ஆராய்ச்சி முதலீட்டில் இரு நாடுகளும் 1 டிரில்லியன் டாலர் வரம்பைக் கடந்துள்ள நிலையில், சீனாவின் ஆய்வுக் கட்டுரைகள், காப்புரிமைகள் உலகில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
Published on

அறிவியல் துறையில் சீனாவின் துரித வளர்ச்சி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் அந்நாடு மேற்கொள்ளும் முதலீடானது, அமெரிக்காவின் முதலீட்டிற்கு இணையான நிலையை எட்டியுள்ளதுடன், வாங்கும் திறன் அடிப்படையில் பார்க்கையில், அதனை மிஞ்சியும் உள்ளதாக, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) மார்ச் 2026 அறிக்கையொன்று தெரிவிக்கிறது. இவ்விரு நாடுகளுமே ஆராய்ச்சிச் செலவினங்களில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் எனும் வரம்பைக் கடந்துள்ளன.

XI Jinping & Trump
XI Jinping & Trump web

2026 மார்ச் மாத அறிக்கையின்படி, ஆராய்ச்சி முதலீட்டில் சீனா தற்போது அமெரிக்காவை மிஞ்சியுள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக இணையம், தடுப்பூசி எனப் பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கிய அமெரிக்கா, தற்போது தனது முதலீட்டைக் குறைத்து வருகிறது. ஆனால் சீனா, ஆய்வுக் கட்டுரைகள் வெளியீட்டிலும் காப்புரிமை பெறுவதிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாற்றமானது, உலகப் பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் தலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com