கொரோனா எதிரொலி: ஜிடிபி சரிவை சந்தித்த சீனா...!

கொரோனா எதிரொலி: ஜிடிபி சரிவை சந்தித்த சீனா...!

கொரோனா எதிரொலி: ஜிடிபி சரிவை சந்தித்த சீனா...!
Published on

(கோப்பு புகைப்படம்)

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2020-ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8 சதவீதம் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 21 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான அமெரிக்காவில் இதுவரை ஆறரை லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,186 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய இந்த வைரஸ், அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தி வந்தது. உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக கூறப்படும் சீனாவின் பொருளாதாரம் கொரோனாவினால் மிகவும் பாதிக்கப்பட்டது.

வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மக்கள் தனிமைப்படுத்தல், பணி நிறுத்தங்கள், ஆலைகள் மூடல், போக்குவரத்து நிறுத்தம் செய்த நிலையில் சீனா வரலாறு காணாத பொருளாதார சரிவினை கண்டது. இதனால் சீனாவின் ஜிடிபி நிலையும் பெரும் கேள்விக்குறியானது.

இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2020-ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தரவு காட்டுகிறது. 1992-க்கு பிறகு சீனாவில், முதல் காலாண்டில் இந்த அளவு ஜிடிபி குறைந்தது இதுவே முதல் முறையாகும் என்றும் சொல்லப்படுகிறது.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.5% குறையும் என்று ஆய்வாளர்கள் ஏற்கெனவே கணித்திருந்தனர். ஆனால் கணிப்பை காட்டிலும் அதிக அளவில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிவை கண்டுள்ளது. முந்தைய காலாண்டில், 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சீனாவின் பொருளாதாரம் 6% வளர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com