சீனாவுக்கு எல்லைச்சண்டை நம்மோடு மட்டுமல்ல

சீனாவுக்கு எல்லைச்சண்டை நம்மோடு மட்டுமல்ல

சீனாவுக்கு எல்லைச்சண்டை நம்மோடு மட்டுமல்ல
Published on

இந்தியாவுக்கு பாகிஸ்தானோடு காஷ்மீர் பிரச்னை இருப்பதுபோல் சீனாவோடு எல்லைப் பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் சீனாவைப் பொருத்தவரை, இந்தியாவோடு மட்டுமல்லாமல் அந்நாட்டை சுற்றியுள்ள 14 நாடுகளோடு எல்லை பிரச்னை உள்ளது.

உலகிலேயே ரஷ்யாவும், சீனாவும்தான் அதிகமான நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. சீனா மட்டும் 14 நாடுகளுடன் எல்லைகளைக் பகிர்ந்துக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான நாடுகளுடன் அந்நாட்டுக்கு எல்லைப் பிரச்னை உள்ளது. ஆஃப்கானிஸ்தான், கசகஸ்தான், மியான்மர், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நில எல்லை பிரச்னை உள்ளது. அதேபோல் ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் சர்வதேச கடல் எல்லை பிரச்னைகள் உள்ளன. இந்த எல்லை பிரச்சனைகள் பெரும்பாலும் தோன்றுவதற்கு காரணம் அதற்கு முன்பு அந்த நாடுகளை ஆண்ட மேற்கத்திய நாடுகளின் சட்டத்திட்டங்களின் மிச்சம் தான். இருநாடுகளும் ஒரே கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும் கொண்டு இருந்தாலும் முன்னோர்கள் அல்லது அந்நாடுகளை முன்பு ஆண்ட மேற்கத்திய நாட்டவரின் ஒப்பந்தங்களுடன் தற்போது நிலவும் பிரச்சனைகளும் சேர்த்துப் பார்க்கப்படுவதே என்று வரலாற்று ஆசிரியார்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிறநாடுகளை காலனிகளாக கொண்ட ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள், அந்த நாட்டின் வளங்களை மட்டும் கொள்ளையடிக்காமல், அண்டை நாடுகளுடன் எப்போதும் பிரச்சனை நீடிக்கும் விதமாக ஒப்பந்தங்களை இயற்றி விட்டு சென்றுள்ளதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com