\
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை- சீன அரசு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை- சீன அரசு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை- சீன அரசு
Published on

கொரோனா வைரஸ் பரவிய நாளில் இருந்து முதல் முறையாக கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை என சீன அரசு ஆறுதலான தகவலை வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச அளவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் நோய் பரவலை தடுக்க சீனா கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்ததால், அந்நாட்டில் மட்டும் தற்போது உயிரிழப்பு கட்டுக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், வைரஸ் பரவிய நாளில் இருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற ஆறுதலான செய்தியை சீன சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

முதல் கட்ட வைரஸ் பரவலை சீனா தடுத்துவிட்டாலும், வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களால், வைரஸ் பரவலை அந்நாடு சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com