உலகம்
சர்வதேச பிரச்னையாக மாறும் சீனாவின் மின்சார பற்றாக்குறை - தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்பு
சர்வதேச பிரச்னையாக மாறும் சீனாவின் மின்சார பற்றாக்குறை - தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்பு
சீனாவில் கடுமையான மின்சார பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் தொழிற்சலைகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உற்பத்திக் கட்டுபாடுகள் அந்நாட்டு ஏற்றுமதியை பாதித்துள்ளது.
சீனாவில் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப மின்உற்பத்தி இல்லாததால் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளை தாண்டி வீடுகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது, உலகம் முழுவதும் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.