அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது நாடு... நிலவில் பறக்கும் சீன தேசியக்கொடி!

அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது நாடு... நிலவில் பறக்கும் சீன தேசியக்கொடி!
அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது நாடு... நிலவில் பறக்கும் சீன தேசியக்கொடி!

அமெரிக்காவின் 'நாசா'-வுக்கு அடுத்து விண்வெளித் துறையில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது, சீன விண்வெளி நிறுவனம்.

சீனா 'சேஞ்ச் 5' என்கிற ஆளில்லா விண்கலத்தை சமீபத்தில் விண்ணில் செலுத்தியது. நிலவின் பாறைத் துகள்களை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. அதன்படி, சில நாட்களுக்கு முன் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சேஞ்ச் 5 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறைத் துகள்களை சேகரித்தது. இதனை சேகரிக்க, சாங்கே - 5 லேண்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த லேண்டர் வாகனம் விண்கலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சென்று பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்ததுடன், சீனாவின் கொடியை நிலவில் நாட்டியுள்ளது.

இப்போது, விண்கலனை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதுவும் அமெரிக்க தனது தேசியக் கொடியை முதன் முதலில் நட்டு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இந்தச் சாதனையை செய்துள்ளது. இதற்கு முன்பே சீனா இந்த முயற்சியை எடுத்தது. ஆனால், முன்பு இரண்டு முறை நிலவுக்கு சென்றபோது கைவினைப் பூச்சுகளால் ஆன கொடிகளைக் கொண்டு சென்றதால் நிலவில் அதை நட முடியவில்லை.

தற்போது நட்டிருக்கும் தேசிய கொடி பறக்கும் புகைப்படங்களை சீன விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தக் கொடியானது, 2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. இந்தக் கொடியில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. அதிக குளிர், அதிக வெப்பம் ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் பயன்படுத்தும் சாதாரணக் கொடி நிலவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு இருக்காது என்பதால், இந்தக் கொடி தனியாக தயார் செய்யப்பட்டது என இந்தத் திட்டத்தின் தலைவர் லி யுன்ஃபெங் குளோபல் டைம்ஸிடம் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா இதுவரை ஐந்து முறை நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளது. இந்த ஐந்து முறையும் நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டியது. ஆனால், அது சேதம் அடைந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த கொடிகள் அனைத்தும் அப்படியே இருக்கிறது என்று 2012-ல் நாசா கூறியது. எனினும் கொடிகள் நிறமிழந்து வெளுத்துப் போயிருக்கின்றது என்றும் தெரிவித்தது. இதற்கிடையே, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு பிறகு மூன்றாவது நாடாக சீனா நிலவின் பாறைகளை ஆராய்ச்சி செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com