சீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா!

சீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா!
சீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா!

மின் சிக்கனத்துக்காக 2020ம் ஆண்டிற்குள் செயற்கை நிலா திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. 

விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளும் போட்டிப்போட்டுக்கொண்டு முன்னேறி வருகின்றன. விதவிதமான செயற்கைக்கோள்கள், விதவிதமான கண்டுபிடிப்புகள் என தங்களை முன்னிருத்தி வருகின்றன. இந்நிலையில் விண்வெளி கண்டுபிடிப்பில் ஒரு படி மேலே போய் சீனா, செயற்கை நிலாவை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது. 

இதன்படி செயற்கை நிலா உருவாக்கப்பட்டு சூரியனிடமிருந்து ஒளியைக் கிரகித்து, பின்னர் அதைப் பூமிக்கு பாய்ச்சும் செயல்பாடுகளை உருவாக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இதற்காக சிச்சுவான் மாகாணத்தின் உள்ள செங்டு நகரை சீனா தேர்வு செய்துள்ளது. நகரின் 50 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்தச் செயற்கை நிலவு மூலம் ஒளியூட்ட முடியும் என்றும் இந்தச் செயற்கைகோள், நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உண்மையான நிலா இருக்கும் தூரத்தைக்காட்டிலும் பல மடங்கு குறைவான நெருக்கத்தில் இந்தச் செயற்கை நிலா இருக்கும். அதாவது பூமியில் இருந்து 500கிமீ தூரத்தில் செயற்கை நிலாவை நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை பேரிடர்களின் போதும், இரவு நேரங்களின் போது தேவையான வெளிச்சத்தை பரப்ப முடியும் என்கிறார்கள். இந்த நிலா மூலம் செங்டு நகர் வருடத்திற்கு 173 மில்லியன் டாலரை மின் செலவை சேமிக்கும். இந்த முயற்சி வெற்றி பெற்றால் 2020க்குள் 3 செயற்கை நிலாக்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com