உலகம்
உலகிலேயே முதல் நாடாக 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்திய சீனா
உலகிலேயே முதல் நாடாக 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்திய சீனா
உலகிலேயே முதல் நாடாக 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்திய நாடு என்ற பெருமை சீனாவுக்கு கிடைத்துள்ளது.
சீனாவில் சினோஃபார்ம், சினோவாக் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு டோஸ்களாக தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், இதுவரை 100 கோடியே 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சீனா சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை 250 கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.